20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியானது

VM| Last Modified செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:37 IST)
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை ஐசிசி வெளியிட்டுள்ளது.


 
பெண்கள் அணிகளுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதில் சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் மோதுகின்றன. மார்ச் 8ஆம் தேதி மெல்போர்னில் இறுதிப் போட்டி நடக்கிறது. 
 
ஆண்கள் அணிகளுக்கான தொடர் 2020ம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்ட நிலையில் மீதமுள்ள 8 அணிகளுக்கு தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :