இந்தியாவுக்கு 9-வது தங்கப் பதக்கத்தை பெற்று தந்த மஞ்சித் சிங்

Last Modified புதன், 29 ஆகஸ்ட் 2018 (12:14 IST)
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 9-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 800மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் மஞ்சித் சிங் (1.46.15) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பந்தய தூரத்தை 1.46 நிமிடத்தில் இந்திய வீரர் மஞ்சித் சிங் கடந்து சாதனை படைத்துள்ளார்.
 
இதே பிரிவில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வீரரான ஜின்சன் ஜான்சன் (1.46.35) 2-வது இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். கத்தாரின் அப்தல்லா அபூபக்கர் 3-வது இடம் பிடித்தார்.
 
இதன் மூலம், இந்தியா 9-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. ஒட்டுமொத்தமாக 46 பதக்கங்களை இந்தியா பெற்றிருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :