1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 21 ஜூன் 2025 (15:07 IST)

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

நேற்று முதல் நாளில் எதிர்பார்த்ததை விட இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 359 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன் மூலம் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இல்லாததால் இந்திய அணித் தடுமாறுமோ என்ற சந்தேகத்துக்கு பதிலளித்துள்ளனர்.

அதிலும் கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலயில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஷுப்மன் கில்லின் முன்னாள் பயிற்சியாளருமான யுவ்ராஜ் சிங் கில் குறித்து “ சில விஷயங்கள் முன்பே எழுதபட்டுவிட்டன. கில், டெஸ்ட் கேப்டனாக உனது முதல் சதத்தை அடித்ததற்காக வாழ்த்துகள். உன்னுடைய பொறுப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளாய்.  உனது பேட் பேசியிருக்கிறது. இன்னும் நிறைய செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.