1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Michael Vaughan sarcastic comment on kohli

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

இந்தியா
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

நேற்று முதல் நாளில் எதிர்பார்த்ததை விட இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 359 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன் மூலம் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இல்லாததால் இந்திய அணித் தடுமாறுமோ என்ற சந்தேகத்துக்கு பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் கோலி பற்றி தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “அணியில் ஒரு பாசிட்டிவ்வான கலாச்சாரத்தை உருவாக்கியதில் கோலி ஒரு ஜாம்பவான். ஒரு கேப்டனாக அவர் அணிக்குள் கொண்டு வந்த ஆற்றல், உத்வேகம் மற்றும் ஆக்ரோஷம் இன்னும் உள்ளது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் அவரின் சராசரி 33 தான். எனவே இந்த தொடரில் இந்திய அணி கோலியை மிஸ் பண்ணாது” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!