நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி...

iundia
Last Updated: திங்கள், 28 ஜனவரி 2019 (15:28 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிலும் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.இப்போட்டியில் ரோஹித் சர்மா 62, விராட் கோலி 60, அம்பாதிராயுடு 40, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்தின் மங்கானூப் நகரில் நடைபெற்ற போட்டியில் போட்டியில் டாஸ் வென்று விளையாடிய நியுசிலாந்து அணி 49 ஒவர்கள் முடிவில் 243 ரன்களுக்கு ஆவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 93, டாம் லாதம் 51 ரன்கள் எடுத்தனர்.
 
இந்திய அணியில்  முகமது ஷமி 3 3, புவனேஷ்குமார் , சஹால் , ஹர்த்திக் பாண்டியா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
 
அதன் பினர் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது.
 
ரோஹித் சர்மா 62 , விராட் கோலி 60, அம்பாதி ராயுடு 40, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் எடுத்தனர்.
 
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது  இந்திய அணி.


இதில் மேலும் படிக்கவும் :