புரோ வாலிபால் லீக்: பிப்.2-ல் கொச்சியில் தொடக்கம்!

Last Updated: திங்கள், 28 ஜனவரி 2019 (13:25 IST)
புரோ கபடி லீக், புரோ மல்யுத்த லீக், புரோ பாட்மிண்டன் லீக் போட்டிகளின் வரிசையில் இந்தியாவில் முதன்முறையாக புரோ வாலிபால் லீக் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி கொச்சியில் கோலாகாலமாக, வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கவுள்ளது.
  

 
புரோ வாலிபால் லீக் போட்டிகள் வரும் 2ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடைபெறவுள்ளது.  பிப்ரவரி 2ஆம் தேதி கொச்சியில் கோலாகாலமாக, வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கவுள்ளது. 2ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கொச்சியிலும், 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னையிலும் நடைபெறவுள்ளது. 
 
இ[இப்போட்டியை இந்திய கைப்பந்து சம்மேளம், பேஸ்லைன் வென்ச்சர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் புரோ கைப்பந்து லீக் ஆகியவை இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
இதில்  கொச்சி ப்ளு ஸ்பைக்கர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ், யு மும்பா வாலி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்கான வீரர்களின் ஏலம் வரும் கடந்த டிசம்பார் மாதம் 13, 14 தேதிகளில் நடைபெற்றது. ஒரு அணியின் 12 வீரர்களில், 2 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நட்சத்திர வீரரும், 21 வயதுக்குட்பட்ட 2 இளம் வீரர்களும் இதில் அடங்குவர். 
 
இந்நிலையில் , கொச்சியில் வரும் 2ஆம் தேதி நடைபெறவுள்ள துவக்க விழாவைத் தொடர்ந்து முதல் ஆட்டத்தில் கொச்சி ப்ளு ஸ்பைக்கர் அணி, யு-மும்பா அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது ஆட்டத்தில் காலிகட் ஹீரோஸ் அணி, சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் மோதுகின்றது என்பது கூடுதல் தகவல் . 


இதில் மேலும் படிக்கவும் :