அம்பத்தி ராயுடு பந்துவீச தடை! ஐசிசி அதிரடி நடவடிக்கை

Last Modified செவ்வாய், 29 ஜனவரி 2019 (08:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராகிய அம்பத்தி ராயுடு பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது. ஆனாலும் அவர் பேட்ஸ்மேன் என்பதால் இந்த தடையால் இந்திய அணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கருதப்படுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன் ஒருநாள் போட்டித்தொடர் முடிந்தது. இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் அம்பத்தி ராயுடு பந்துவீசினார். ஆனால் அவரது பந்துவீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக நடுவர்கள் தெரிவித்ததால் அவர் 14 நாட்களுக்குள் ஐசிசி பரிசோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தும்படி உத்தரவிடப்பட்டது.


ஆனால் இந்த உத்தரவின்படி 14 நாட்களுக்குள் சோதனை செய்ய அம்பத்தி ராயுடு ஆஜராகவில்லை. .இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச, அவருக்கு தடை விதிக்கப்பட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. எனவே இனிவரும் போட்டிகளில் அம்பத்தி ராயுடு பந்துவீச மாட்டார் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :