திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (16:51 IST)

தோனிக்கு ஸ்பெஷல் மேசேஜ் வழங்கியுள்ள ரோகித்...

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்நிலையில் ரோகித் சர்மா தோனிக்கு ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றை வழங்கியுள்ளார். ரோகித் கூறியதாவது, பேட்டிங்கில் எந்த டவுன் ஆர்டரில் நான் இறங்குவேன் என்பதை சர்ப்ரைஸாக வைத்திருக்க விரும்புகிறேன். 
 
எங்கள் நடுவரிசை வலுவாக உள்ளது, எவின் லூயிஸ், இஷான் கிஷன் மூலம் நல்ல தொடக்க வீரர்களும் உள்ளனர். 7 ஆம் தேதி பார்ப்போம் நான் எந்த டவுன் ஆர்டரில் இறங்குகிறேன் என்பதை அதுவரை அது சர்ப்ரைசாக இருக்கட்டும் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், எந்த மாதிரியான வீரர்களை கொண்டிருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே நல்ல அணி. மும்பை இந்தியன்ஸுக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் எங்களைப் பாதிக்காது. ஒரு அணியாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இதைத்தான் செய்தோம் எனவும் கூறியுள்ளார். 
 
சமீபத்தில் சிஎஸ்கே அணியில் பேட்டிங் ஆரட்டர் குறித்த தகவல் வெளியான நிலையில், ரோகித் சர்மா தனது எண்ட்ரியை சிக்ரெட்டாக வைத்திருக்க போகிறேன் என்று மறைமுகமாக ஏதோ மேசேஜ்ஜை தோனிக்கு வழங்கியுள்ளார்.