வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:09 IST)

சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை கர்மன் தாண்டிக்கு முதல் வெற்றி

karman thandi
சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை கர்மன் தாண்டிக்கு முதல் வெற்றி
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று முதல் தொடங்குகிறது என்பதும் இந்த போட்டி நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் இந்திய வீராங்கனை கர்மன் தாண்டி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில்  கர்மன் தாண்டி முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தாலும் 2-வது மற்றும் 3-வது செட்டில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த போட்டியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரடியாக பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தரவரிசையில் 359வது இடத்தில் இருக்கும்  கர்மன் தாண்டி தரவரிசையில் 111 வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீராங்கனை சோல் ப்ராக்கெட்  என்பவரை தோற்கடித்துள்ளதால் கர்மான் தாண்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.