வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

chennai open
சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: யார் யார் கலந்து கொள்கிறார்கள்?
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று முதல் நடைபெற உள்ளது 
 
சென்னையில் சமீபத்தில் உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடந்த நிலையில் இன்று முதல் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இன்று தொடங்கும் போட்டிகள் வரும் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதும் இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெல்லும் வீராங்கனைக்கு ரூபாய் 25 லட்சமும், இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடிக்கு ரூபாய் ஒன்பது லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடும் சர்வதேச வீராங்கனைகள் பெயர்கள் பின்வருமாறு: 
 
அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே
 
ரஷ்ய வீராங்கனை வர்வரா கிராசெவா 
 
போலந்து வீராங்கனை மேக்டா லினெட் (போலந்து), 
 
கனடா வீராங்கனை யூஜெனி புசார்ட் 
 
ஜெர்மனி வீராங்கனை தாட்ஜனா மரியா 
 
பெல்ஜியம் வீராங்கனை யானினா விக்மேயர் 
 
சின வீராங்கனை குவாங் வாங்க் 
 
ஸ்வீடன் வீராங்கனை ரெபக்கா பீட்டர்சன் 
 
இந்தியாவின் வீராங்கனைகள்அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தண்டி