1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர்!

carls
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர்!
கடந்த சில நாட்களாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் என்பவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். 
 
டென்னிஸ் போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ஏழாவது இடத்தில் இருக்கும் நார்வே வீரர் கேஸ்பர் என்பவர் உடன் மோதினார் 
 
இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது