செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (15:48 IST)

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ரபெல் நடால்

Nadal
கடந்த சில நாட்களாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் ரபேல் நடால் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியதை அடுத்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
உலகின் நம்பர் 3 நிலையிலுள்ள வீரர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால். இவர் நேற்று பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் என்பவர் எதிர்கொண்டார். இந்த போட்டியில் நடால் 6-0, 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார் 
 
நான்காவது சுற்றில் அமெரிக்காவின் பிரான்செஸ் டியோபோ என்பவருடன் மோத இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபெல் நடால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற அதிக வாய்ப்பு இருப்பதாக டென்னிஸ் விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்