1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (09:07 IST)

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய செரீனா வில்லியம்ஸ்!

serena
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் உடன் மோதினார். இந்த போட்டியில் செரீனா  7-6 (4), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். 
 
40 வயதான செரீனா இந்த தொடருடன் ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதால் அமெரிக்க டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில்  அடுத்த சுற்றில் செரீனா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிக் உடன் மோதவுள்ளார்.