தோல்வியுடன் முடிந்த டென்னிஸ் பயணம்! – விடைபெற்றார் செரீனா வில்லியம்ஸ்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டிலிருந்து விடை பெற்றார்.
உலகம் முழுவதும் பிரபலமான டென்னிஸ் வீராங்கனைகள் முக்கியமான இடத்தில் இருப்பவர் செரீனா வில்லியம்ஸ். நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் கலந்து கொண்டு விளையாடினார்.
இந்த போட்டியின் மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனீவிக்குடன் மோதிய செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.
கடந்த 27 ஆண்டு காலமாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடி பல பதக்கங்களை வாங்கி குவித்த செரீனா வில்லியம்ஸ் இந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தனது கடைசி போட்டி என அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த தோல்வியுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் செரீனா வில்லியம்ஸ்