1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India lost 2 wickets; England started its attack

டக் அவுட்டான முரளி விஜய்; தாக்குதலை தொடங்கிய இங்கிலாந்து

இந்தியா
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டிக்ளேர் செய்த பிறகு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. 

 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இங்கிலாந்து அணி 289 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
 
ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு பலமாக நின்றனர். ஜானி பேர்ஸ்டோவ் 93 ரன்கள் குவித்து வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் 137 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
 
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. முரளி விஜய் டக் அவுட்டானார்.
 
அடுத்த கட்டுரையில்
84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா