திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 11 ஆகஸ்ட் 2018 (19:15 IST)

இரண்டாவது டெஸ்ட்; இங்கிலாந்து முன்னிலை

இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை வகித்து வருகிறது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. 
 
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
 
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தற்போது வரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. 
 
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.