1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (16:21 IST)

பரிதாப நிலையில் இந்தியா; அடித்து தும்சம் செய்த இங்கிலாந்து

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தற்போது வரை 287 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. முகமது ஷமி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்ற இங்கிலாந்து அணி கட்டுக்குள் வந்தது. ஆனால் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இருவரும் இணைந்து இந்திய அணி பந்துவீச்சாளர்களை திணறவிட்டனர்.
 
ஜானி பேர்ஸ்டோவ் 93 ரன்கள் குவித்து வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் சதம் விளாசி அசத்தினார். தற்போது கிறிஸ் வோக்ஸ் 131 ரன்களுடன் களத்தில் உள்ளார். 
 
இவர்கள் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணியை அசைக்க முடியாத நிலையில் கொண்டு சென்றுள்ளனர். இதனால் இங்கிலாந்து அணி 287 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
 
பெரும்பாலும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது.