1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (12:04 IST)

வயதானதை மறந்துவிட்டேன்: இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன்!

இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து முன்னணியில் உள்ளது. 
இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
 
இவர் இந்தியாவுக்கு எதிராக மட்டும் இதுவரை 24 டெஸ்ட் போட்டியில் 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை பாகிஸ்தானின் இம்ரான்கானிடம் இருந்து தட்டிப்பறித்தார்.
 
இது குறித்து ஆண்டர்சன் பின்வருமாறு பேசினார், எனக்கு வயதாகி விட்டதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களை போலவே களத்தில் இன்னும் என்னால் முழு அளவில் சாதிக்க முடியும் என்று உணர்கிறேன். இதே உணர்வு இருக்கும் பட்சத்தில் முடிந்த அளவுக்கு நீண்ட காலம் விளையாட முடியும் என தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர், மற்றவர்களை போல கோலியை ஏன் அவுட்டாக முடியவில்லை என்று யோசிக்க வைத்துள்ளார். கோலி தற்போது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளார். அவருக்கு எதிராக பந்து வீசுவது, அவரைக் கட்டுப்படுத்துவது என்பது சுவாரசியமாகவே உள்ளது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.