1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. England cricketer Ben Stokes arrest

பிரபல கிரிக்கெட் வீரர் பிரிஸ்டல் நகரில் கைது...

பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரிஸ்டல் நகரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. 
 
இதன் பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் மதுபானம் அருந்திவிட்டு அங்கிருந்த நபருடன் வாக்குவாததில் ஈடுபட்டதாக தெரிகிறது.  
 
அந்த நபரை இவர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால், பென் ஸ்டோக்ஸை கைது செய்து போலீசார் இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர். 
 
பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விடுவித்துள்ளனர்.  இதனால் இருவரும் நாளைய போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்த் அணி அறிவிப்பு!!