திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (23:27 IST)

மீண்டும் அதே ஐந்து வினாடி, இரண்டு புள்ளிகள்: புல்லரிக்க செய்த தமிழ் தலைவாஸ்

புரோ கபடி போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் தற்போது நடந்து வரும் போட்டிகள் விறுவிறுப்புடன் உள்ளது. கடந்த போட்டியில் கடைசி ஐந்து வினாடிகளில் இரண்டு புள்ளிகள் எடுத்து ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் இன்று நடந்த போட்டியிலும் அதே ஐந்து வினாடி இருக்கும்போது இரண்டு புள்ளிகள் எடுத்து ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.



 
 
இன்று குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பம் முதல் இறுதிவரை போராட்ட குணத்தோடு விளளயாடியது. இறுதியாக குஜராத் அணி 34 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி 33 புள்ளிகளும் பெற்றிருந்தன. இந்த நிலையில் ஆட்டம் முடிய வெறும் ஐந்து நொடிகளே இருந்த நிலையில் கடைசி ரைடில் கேப்டன் அஜய்தாக்கூர் இரண்டு புள்ளிகள் பெற்று குஜராத் அணியை 35-34 என்ற கணக்கில் வீழ்த்தியது தமிழ் தலைவாஸ் அணி 
 
இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணிக்கு 4 வெற்றிகள் கிடைத்துள்ளதால் அடுத்த சுற்றுக்கு தகுதியாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.