காயங்கள், சர்ஜரிகள் சாதனைக்கு தடையல்ல: தனுஷ் சொல்வது யாரை தெரியுமா?
ஏகப்பட்ட காயங்கள், முழங்கால் காயங்கள், சர்ஜரிகள், வலிகள் அனைத்தையும் மீறி சாதனை செய்த நபருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என தனுஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
தனுஷின் இந்த வார்த்தைகளை மேலோட்டமாக பார்க்கும் அனைவருக்கும் அஜித்தின் 'விவேகம்' வெற்றி பெற்றதைத்தான் அவர் குறிப்பிட்டதாக தெரியும். ஆனால் தனுஷ் குறிப்பிட்டது அஜித்தை அல்ல, அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் வென்ற நடால் என்ற சாதனை வீரரைத்தான் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஆண்டர்சனுடன் மோதிய நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வென்று, அமெரிக்க ஓப்பன் பட்டத்தைக் கைப்பற்றி என்பது குறிப்பிடத்தக்கது.