1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 16 செப்டம்பர் 2017 (15:16 IST)

10 வருடத்தில் 150 முறை பாலியல் பலாத்காரம் செய்த கிரிக்கெட் வீரர்

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய தென் ஆப்பரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 18 ஆண்டுக்ள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
தென் ஆப்பரிக்காவை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் டயன் தல்யார்ட்(47) என்பவர் தென் ஆப்பரிக்காவின் பார்டர் அணிக்காகவும், இங்கிலாந்து கிளப் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் கொடுத்தார்.
 
டயன் தல்யார்ட் 2002 முதல் 2012 வரை 150 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் கொடுத்தார். ட்யன் மீது 19 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்து வந்தது. 
 
இந்நிலையில் டயன் மீதான 19 வழக்குகளிலும் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.