1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified புதன், 14 செப்டம்பர் 2022 (18:03 IST)

இந்தியாவுக்காக ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை: ஆதங்கத்துடன் ஓய்வு பெற்ற சிஎஸ்கே வீரர்

eswar pandey
இந்தியாவுக்காக ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை: ஆதங்கத்துடன் ஓய்வு பெற்ற சிஎஸ்கே வீரர்
இந்தியாவுக்காக ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் சிஎஸ்கே வீரர் ஒருவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்
 
சிஎஸ்கே அணியின் வீரர்களில் ஒருவராக இருந்தவர் வேகப்பந்துவீச்சாளர் ஈஸ்வர் பாண்டே. இவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அதில் கனத்த இதயத்துடன் நான் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
 
 2007ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பயணத்தை நான் அனுபவித்து வந்தேன். இந்தியாவுக்காக ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை என்ற ஆதங்கம் தான் எனக்கு இன்னும் வருத்தத்துடன் இருக்கிறது
 
இருப்பினும் நான் இந்திய கிரிக்கெட் வீரராகவே அறியப்படுகிறேன். எனக்கு முதன் முதலாக ஐபிஎல் வாய்ப்பை வழங்கிய புனே அணிக்கும், என்னை தேர்வு செய்த சென்னை அணிக்கும் நன்றி என்று கூறியுள்ளார்