1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suresh Raina planning to retire from IPL

ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வா?

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா கடந்த ஐபிஎல் சீசனில் எந்தவொரு அணியாலும் ஏலம் எடுக்கப்படாததால் வரணனையாளராக பணியாற்றினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. அதனால் அவரை ரசிகர்கள் சின்ன தல என்றும் அன்போடு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. இதனால் அவரை இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை உள்பட எந்த அணியும் எடுக்கவில்லை.

இதனால் இந்தி வரணனைக் குழுவில் அவர் பணியாற்றினார். இந்நிலையில் இப்போது அவர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.