1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 டிசம்பர் 2025 (10:32 IST)

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் இறுதி பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஏலத்தில் பங்கேற்க முதலில் பதிவு செய்த 1,355 வீரர்களில் இருந்து, தற்போது 350 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த இறுதிப்பட்டியலில் 240 இந்திய வீரர்கள் மற்றும் 110 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அனைத்து அணிகளிலும் மொத்தம் 77 இடங்கள் காலியாக உள்ளன. இதில், 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆயத்தமாகி வருகின்றன.
 
அணிகளிடம் உள்ள தொகையை பொறுத்தவரை, கொல்கத்தா அணியிடம் அதிகபட்சமாக ரூ.64.30 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் குறைந்தபட்சமாக ரூ.2.75 கோடியும் கையிருப்பு உள்ளது. இந்த ஏலத்தில் அடிப்படை விலை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட வீரர்களும், ரூ.1 கோடி அடிப்படை விலை கொண்ட வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
 
Edited by Mahendran