மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்? வெளியான தகவல்!
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜகவின் எம்.,பி. யாக உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாகக் களமிறங்கும் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விரைவில் தொடங்க லெஜண்ட் லீக் கிரிக்கெட்டின் இரண்டாவது சீசனில் அவர் விளையாட உள்ளார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லெஜண்ட் லீக் கிரிக்கெட்டின் நிறுவனர் வெளியிட்டுள்ளார். ஆக்ரோஷமான கம்பீரை மீண்டும் களத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.