வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 மார்ச் 2018 (19:42 IST)

களத்தில் நாங்கள் மிஷின் இல்லை; தெ.ஆ வீரருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரெட் லீ

ஆஸ்திரேலிய கேப்டனை வீத்திய பின் தோளில் மோதி டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு ஆதாரவாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.

 
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா சிறப்பாக பந்து வீசினார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை வீழ்த்திய பின் அவரது தோளில் நேருக்கு நேர் மோதினார். இதனால் அவருக்கு 3 டிமெட்ரிக் வழங்கப்பட்டது. ஏற்கனவே அவர் 5 டிமெட்ரிக் புள்ளி பெற்று இருந்தார்.
 
மொத்தம் 8 டிமெட்ரிக் புள்ளிகள் பெற்றதால் டெஸ்டில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ ரபாடாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
 
மைதானத்தில் வீரர்கள் ரோபோவாக செயல்பட முடியாது. வீரர்கள் எல்லையை மீறக்கூடாது. ஆனால் பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேனை நேருக்கு நேர் பார்க்கக்கூடாது என்றும் பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சாளர்களை நேருக்கு நேர் பார்க்கக்கூடாது என்பதை நாங்கள் விரும்பவில்லை என்று என்னால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.