வியாழன், 12 மார்ச் 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2026 (08:39 IST)

சஞ்சு சாம்சனின் 97 ரன்களை விட ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமானது: கம்பீர்

சஞ்சு சாம்சனின் 97 ரன்களை விட ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமானது: கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அணியின் வெற்றிக்கு சிறிய பங்களிப்புகளே அடித்தளமாக அமைகின்றன என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நடந்த மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்களுக்கு இணையாக, ஷிவம் துபே அடித்த அந்த 2 பவுண்டரிகள் முக்கியமானவை என்று அவர் சுட்டிக்காட்டினார். 
 
துபே அந்த முக்கியமான ரன்களை எடுக்காமல் போயிருந்தால், சஞ்சுவின் 97 ரன்கள் பற்றிய பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கும் என்று அவர் கூறினார்.
 
பெரிய சாதனைகள் மற்றும் அதிக ரன்கள் எடுக்கும் வீரர்கள் எப்போதும் தலைப்பு செய்திகளாக மாறலாம்; ஆனால், இக்கட்டான சூழலில் எடுக்கப்படும் சிறிய பங்களிப்புகள்தான் உண்மையில் ஒரு அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்கின்றன என்பது கம்பீரின் கருத்தாகும். 
 
இது போன்ற சிறிய மாற்றங்களே அணியின் ஒட்டுமொத்த பலத்தை அதிகரிக்கின்றன. வீரர்களிடையே இது போன்ற கூட்டு முயற்சியே வெற்றிக்கு தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
 
Editd by Siva