திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (15:41 IST)

டி-20 வரலாற்றில் அதிகபட்ச சேசிங் சாதனை: ஆஸ்திரேலியா அபாரம்

டி-20 வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்து ஆஸ்திரேலியா அணி சாதனை செய்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி-20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன, நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 243 ரன்கள் அடித்தது. டி-20 வரலாற்றில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை நிகழ்த்தப்பட்டது. ஆனால் இந்த சாதனை ஒருசில மணி நேரங்களில் தகர்க்கப்பட்டது. 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 245 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு முன்னர் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 போட்டி ஒன்றில் தென்னாப்பிரிக்க கொடுத்த 232 என்ற இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி எட்டியதே அதிகபட்ச சேசிங் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.