வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 11 மார்ச் 2018 (17:35 IST)

தனிநபராக போராடி சதத்தை பதிவு செய்த டிவில்லியர்ஸ்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு சதம் அடித்துள்ளார். 

 
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. 
 
இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. டிவில்லியர்ஸ் 74 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 
3வது நாளான இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிவில்லியர்ஸ் தனது 22வது சதத்தை டெஸ்ட் அரங்கில் பதிவு செய்தார். 2015ஆம் ஆண்டு பிறகு தற்போதுதான் டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். டிவில்லியர்ஸ் சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 382 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 126 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிக்கா அணி 139 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்ன்னிங்ஸை தொடங்கியுள்ளது.