திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (17:49 IST)

மந்திரிகளின் தகாத உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர்!

ஆஸ்திரேலியாவில் மந்திரிகள் யாரும் தங்களது பெண் ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ், தன்னுடன் பணியாற்றிய விக்கி கேம்பியன் என்ற பத்திரிகை ஆலோசகருடன் ‘செக்ஸ்‘ வைத்திருந்த சம்பவம் அனைவருக்கும் தெரியவந்தது. இதனால் அவரை பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் வற்புறுத்தினர்.
 
இது குறித்து நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வெளியிட்ட அறிக்கையில், மந்திரிகள் திருமணம் ஆனவராக இருந்தாலும், ஆகாதவராக இருந்தாலும், தங்களது பெண் ஊழியர்களுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்றார். மந்திரிகளுக்கு அந்தரங்க உரிமை இருப்பினும், அவர்கள் கண்ணியமாக நடக்க வேண்டும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்று அறிவித்தார்..
 
ஆகவேதான், மந்திரிகளுக்கான நடத்தை விதிமுறைகளில் இந்த தடையை சேர்த்துள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.