1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (17:29 IST)

யாரு சாமி இவனுங்க; பட்டையை கிளப்பும் ஆஸ்திரேலியாவின் புதிய பயிற்சி முறை

ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகிற்கு, எப்படி பந்தை பார்க்காமல் கேட்ச் பிடிப்பது என்ற புதிய பயிற்சி முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

 
கேட்ச் பிடிக்க புதிய பயிற்சி முறையை ஆஸ்திரேலியே கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பயிற்சியில், பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையே ஒரு திரை வைக்கப்படும். பயிற்சியாளர் மறுபக்கம் இருக்கும் வீரருக்கு கீழ் வழியாக பந்தை வேகமாக வீசிவார். வீரர் பந்தை சரியாக பிடிக்க வேண்டும்.
 
பந்து எந்த திசையில் இருந்து வந்தாலும் எளிதாக யூகித்து கேட்ச் பிடிக்க இந்த புதிய பயிற்சி முறை உதவும். அதேபோல் திரை இல்லாமல் எப்படி கேட்ச் பிடிப்பது என்று பயிற்சி செய்யும் வீடியோ டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
 
ஆஸ்திரேலியாவின் இந்த புதிய பயிற்சி முறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.