தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ரூ.16.28 அபராதம்.. அதிர்ச்சியில் வீரர்கள்..!
- மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!
- டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!
- டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!
- சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என்று கணித்திருந்த முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறார்.
முன்னதாக, ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமீர், "பாகிஸ்தான் தகுதி பெறுகிறதோ இல்லையோ, இந்தியா நிச்சயம் அரையிறுதிக்கு வராது" என்று ஆருடம் கூறியிருந்தார்.
ஆனால், சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அந்த கணிப்பை பொய்யாக்கியுள்ளது. குறிப்பாக, தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் சஞ்சு சாம்சன் நங்கூரம் போன்று நின்று இந்தியாவை வெற்றி பெற செய்தார்.
இப்போது இந்தியா மார்ச் 5-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. அமீரின் 'ஜோதிடம்' பலிக்காததை இந்திய ரசிகர்கள் மீம்ஸ்கள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
