தொடர்புடைய செய்திகள்
- மொத்தமா 840 விமானங்கள் வேணும்! பல்க் ஆர்டர் கொடுத்த ஏர் இந்தியா!
- இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களை மூடுங்கள்: எலான் மஸ்க் உத்தரவு..!
- டாஸ் வென்ற ஆஸி அணி எடுத்த முடிவு – இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றம்!
- இந்தியாவோடு பாகிஸ்தான் இணைந்தால் நல்லது: உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத்
- இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்க என்ன செய்யவேண்டும்?
இரண்டாவது டெஸ்ட்டிலும் அசத்தும் அஸ்வின்.. ஒரே ஓவரில் 2 விக்கெட்டுக்கள்..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இரண்டாவது இன்னிங்சிலும் அவர் அடுத்தடுத்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இன்றைய 23 வது ஓவரை வீசிய அவர் நான்காவது பந்தில் லாபுசாஞ்சே விக்கெட்டையும், ஆறாவது பந்தில் ஸ்மித் விக்கெட்டையும், வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் காவஜா அரைசதம் அடித்துள்ளார். அவர் 74 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
Edited by Mahendran
