திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:22 IST)

இந்தியாவோடு பாகிஸ்தான் இணைந்தால் நல்லது: உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத்

yogi
இந்தியாவுடன் விரைவில் பாகிஸ்தான் இணைந்தால் அந்நாட்டிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நல்லது என உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். 
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிய பேட்டி அளித்த போது அவர் பாகிஸ்தான் பூமிக்கு பாரம் என்றும் உலகில் பாகிஸ்தானுக்கு உண்மையான தனி அடையாளம் என்று எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். 
 
இந்தியாவோடு பாகிஸ்தான் விரைவாக  இணைந்தால் அந்நாட்டிற்கு நல்லது என்றும் இந்தியாவிலிருந்து ஹஜ் செய்பவர்களை அங்கு உள்ளவர்கள் இந்து என்று தான் குறிப்பிடுகிறார்கள் என்றும் ஒருவரும் இந்தியர்களை முஸ்லிமாக பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார். 
 
இந்தியாவில் வாழும் குடிமக்கள் எல்லோரும் இந்துக்கள் தான் என்றும் இந்து என்பதை மதத்தோடு நம்பிக்கையோடு பிரிவோடு நாம் இணைக்கிறோம் என்றும் புரிந்து கொள்வதில் தான் நான் தவறு செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva