வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (11:24 IST)

ஸ்டிங் ஆபரேஷன் விவகாரம்: பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மாவின் அதிரடி முடிவு..!

chetan sharma
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா ராஜினாமா: பரபரப்பு தகவல்..!
பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா திடீர் என தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் இந்திய அணி தொடர்பான சில ரகசியங்களை சேதன் சர்மா கசிய விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
சமீபத்தில் தனியா தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் சர்மா ஒரு சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார். குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் கங்குலி குறித்து அவர் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
 
இந்த நிலையில் சற்றுமுன் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக சேத்தன் சார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தேர்வு தலைவராக சேத்தன் சர்மா கடந்த மாதம் தான் மீண்டும் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva