கருங்காலியின் மகிமைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Karungali tree
Sasikala|
கருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின் கதிர்வீச்சுகளை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி வாய்ந்த மரம் கருங்காலி. தீராத பிணிகளுக்கு அருமருந்தாகவும்  செயல்படுகிறது. 

கருங்காலியை குறி சொல்ல பயன்படுத்துவார்கள். இதன் மூலம் தெய்வ சக்தி ஈர்க்கப்பட்டு அருள் வாக்கு சொல்ல முடியும். ருத்ராட்ச மாலையுடன் கோர்த்து  அணிந்து கொள்வார்கள். கோபுர கலசத்தினுள் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.
 
மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மரத்தின் பழமையை பொறுத்து அதன் பலன்களும் கூடுகின்றது. முற்றிய மரத்தின் கட்டையில் அளப்பரிய பல நற்குணங்கள் ஒளிந்துள்ளன. இதன் இன்ன பிற பகுதிகளும் மருந்தாகின்றன. குளிக்கும் நீரில் போட்டு வைத்தால் அதன் நிறம் மாறுமாம். இதில் குளித்து வந்தால் உடல் சோர்வு  நீங்கி உடனே புத்துணர்வு கிட்டும். 
 
அதீத சக்தி பெற்ற உண்மையான கருங்காலி கட்டை ஒன்றை உங்கள் வசதிக்கேற்ப சரியான அளவில் வாங்கி வைத்து, புனித நீர் வீட்டில் வைத்திருந்தால் அந்த நீரை கொண்டு கருங்காலியை எல்லா பக்கமும் தடவி வைக்கலாம். இல்லையேல் பசும்பால் கொண்டும் தடவலாம்.
 
பின்னர் கட்டையின் மேற்புறத்தில் சந்தனம், குங்குமம் மூன்று முறை அருகருகே இட்டு கொள்ள வேண்டும். அதன் பின் நாணயம் மூன்றை எடுத்து கும்குமம் இட்ட இடத்தில் வைக்க வேண்டும். நாயுருவி வேர் கிடைத்தால் அதையும் கட்டையின் மேல் வைத்து கொள்வது நல்லது.
 
குலதெய்வத்தை நினைத்து மலர் மாலை ஒன்றை சாற்றி, பின்னர் தூப, தீபம் காட்ட வேண்டும். தூபம் காட்டும் போது குலதெய்வ மந்திரத்தை 108 முறை உச்சரிக்க  வேண்டும். இவ்வாறு செய்தால் உங்களின் குலதெய்வம் மகிமை வாய்ந்த கருங்காலியினுள் இறங்கும். வேண்டிய வரம் கிட்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் வேண்டிய வரம் பெறலாம். 


இதில் மேலும் படிக்கவும் :