செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 6 ஜூன் 2025 (11:59 IST)

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!
50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என கிரிக்கெட்டின் மிகப்பெரிய கோப்பைகளை எல்லாம் கைவசம் வைத்திருந்தாலும் விராட் கோலிக்குக் கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை என்பது எட்டாக் கனியாக இருந்தது. அதை எட்டும் வகையில் நேற்று கோலி படை ஐபிஎல் கோப்பையைக் கைகளில் ஏந்திவிட்டது.

கோலியின் ஜெர்ஸி எண்ணான 18 உடன் தொடர்புபடுத்தும் விதமாக அவர் 18 ஆவது சீசனில் கோப்பையை வென்றுள்ளார் என்று அவரது ரசிகர்கள் ஜோதிடக் கணக்குகளை சொல்லி வருகின்றனர். இந்நிலையில் கோலி 18 ஆம் எண்ணுடன் தனக்குள்ள தொடர்கதையைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் “என்னுடைய தந்தை டிசம்பர் 18 ஆம் தேதி காலமானார்.  நான் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் தேர்வான போது அவர்கள் எனக்கு 18 ஆம் நம்பர் ஜெர்ஸியைக் கொடுத்தார்கள்.  நான் என்னுடைய இந்திய அணிக்கான முதல் போட்டியை ஆகஸ்ட் 18 ஆம் தேதி விளையாடினேன்.  எனக்குத் தெரியவில்லை. ஆனால் 18 என்ற எண் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷேச தொடர்பைக் கொண்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.