தொடர்புடைய செய்திகள்
- அயோத்தி ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை.. 5 நாள் சுற்றுப்பயணம் என தகவல்..!
- அதிபர்னா இஷ்டத்துக்கு வரி போடுவீங்களா? ட்ரம்ப் விதித்த உலக நாடுகள் வரிக்கு தடை! - நீதிமன்றம் உத்தரவு!
- ஏமாற்றமடைந்தேன், அதனால் விலகுகிறேன்.. அரசியலே இனி வேண்டாம்: எலன மஸ்க் அறிவிப்பு..!
- மூன்றாவது உலகப்போர் வேணாம்னு நினைக்கிறேன்!? - ட்ரம்ப்க்கு ரகசிய எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!
- எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி.. இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது..!
டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!
அமெரிக்காவில் வரி குறைப்பு மசோதா விவகாரத்தில் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அது வெளிப்படையாக வெளியாகியுள்ளது. எம்பிக்கள் மசோதாவை படித்து விடக்கூடாது என்பதற்காக, இரவோடு இரவாக எலான் புதிய மசோதாக்களை நிறைவேற்றி வருகிறார் என்று எலான் மஸ்க் டிரம்ப் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், மசோதாவை பற்றி எலான் முழுமையாக அறிந்திருந்தார் என்று கூறிய ட்ரம்ப், எலான் விமர்சனத்தால் தான் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தார். இதற்கு பதில் கூறிய எலான், "நான் உதவி செய்யாவிட்டால், ட்ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பார். நான் அவருக்காக 250 மில்லியன் டாலர் தேர்தலின் போது செலவு செய்தேன். அவர் நன்றி இல்லாதவர்," என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதனை அடுத்து, எலான் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அளிக்கும் சலுகைகளை நிறுத்தப்போவதாக டிரம்ப் மிரட்டினார். இருவருக்கும் இடையிலான இந்த கருத்து வேறுபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
