1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Get ready for the umbrella! Expect heavy rain for next 6 days in Tamilnadu districts

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

Rain

தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டின் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 8ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

 

மே 9ம் தேதி தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும்.

 

10ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

 

11ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

12ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K

அடுத்த கட்டுரையில்
சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!