1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 6 ஜூன் 2025 (10:48 IST)

கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா! காசு கொடுத்து கட்டிப்பிடிக்கும் பெண்கள்! - சீனாவில் புது ட்ரெண்ட்!

Hug
AI Generated
 

சீனாவில் மன அழுத்தத்தை குறைக்க பெண்கள் பணம் கொடுத்து ஆண்களை கட்டிப்பிடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உலக அளவில் மக்கள் தொகையில் முன்னணியில் உள்ள சீனா சமீபமாக பல்வேறு குடும்ப நல சிக்கல்களை சந்தித்து வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த பிறப்பு விகிதத்தை குறைத்ததால் எதிர்காலத்தில் முதியவர்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற சீனா ஊக்கமளிக்கிறது. அதேசமயம் ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம் குறைவாக இருப்பதால் சீன ஆண்கள் வேறு நாட்டு பெண்களை திருமணம் செய்வது ஒருபக்கம் அதிகரித்து வருகிறது.

 

இதற்கிடையே சீனாவில் உள்ள பெண்கள் குடும்ப சூழல், பணி சூழல் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்களுக்கு பணம் கொடுத்து அவர்களை கட்டி அணைத்துக் கொள்ளும் புது ட்ரெண்ட் சீனாவில் உருவாகியுள்ளது. எதிர்பாலினத்தவரை கட்டியணைப்பதால் உருவாகும் ஹார்மோன் தங்களை இளமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

 

தற்போது இவ்வாறாக கட்டியணைப்பதை முழு நேரமாக செய்து வரும் ஆண்கள் ‘மேன் மம் (Man Mum)” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு கட்டிப்பிடி வைத்தியத்திற்கு குறைந்த பட்சமாக 50 யுவான் பெறுவதாகவும், கட்டிப்பிடிக்கும் நேரத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K