வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (22:27 IST)

இளைஞர்களே…. தற்கொலை எண்ணம் தீர்வல்ல… சிறப்புக் கட்டுரை

என்னவென்று சொல்வேன் இந்தப்

பொல்லாத உலகின் போக்கை !

சொன்னதொன்று நேரு மென்று

யாருமிங்கு நினைக்கும் முன்பே

சொன்னதைவிட் டெரிப்ப தாக

தொல்லையொன்று நேரு திங்கு !

கன்னமிட்ட கைகளில் யார்தான்

வைத்ததொருகொள்ளி அந்தப்

புண்ணாக்கும் சோகக் கொள்ளி …

முன்வினையென் றெவரும் சொல்லிக்

கொண்டிராமல் வாழும் வாழ்க்கைக்

கலையைநாம் மகிழ்ந்து ஆள்வோம்!!( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

 

இருக்கின்ற இந்த ஒரே வாழ்க்கையில்தான் அத்தனைப்பிரச்சனைகளும் நம்மைத்தேடித் தேடி வருகின்றது. சோகத்திலிருந்து விடுதலைப்பெற வேண்டி இன்னொரு இடத்திற்குச் சென்றால் அங்கும் எதாவதொரு சோகப்பறவைத் பிரச்சனையெனும் இரையைத் தன் அலகில் கொத்திவருகிறது.

எங்குதான்நிம்மதி என்று யோசித்தால் தாயின் கருவிலும், இப்பூமியில் பிறக்கவே பிறக்காத குழந்தையிடம் மட்டும்தான் அது உள்ளதாக நினைக்கவேண்டியுள்ளது.

பூசாரிக்கும்கவலை, அவன் வழிபடும் கடவுளுக்கும் கவலை ஆசிரியருக்கும் கவலை, அவன் பாடஞ்சொல்லுத்தரும்மாணவர்களுக்கும் கவலை; பொற்றோருக்கும் கவலை, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும் கவலை; அடுத்த வீட்டாருக்கும் கவலை, அவர்களை ஒட்டியுள்ள நமக்கும் கவலை, வாகனத்தை ஓட்டிச் செல்வோருக்கும் கவலை, அவரைத் தடுத்து நிறுத்தும் காவல் அதிகாரிக்கும் கவலை. இந்தக் கவலைகளின் மொத்தக் கோர்வைக்கும் காரணமாக ஒவ்வொருத்தரின் வாழ்விலும் வரும் பிரச்சனைகளே முக்கிய காரணமாக அமைகின்றன.

ஒன்றிலிருந்து ஒன்று விலகி நாம் நிம்மதி தேடிச் செல்லும்போது, நமது தேடுதல் அதிகமானாலும் நிம்மதி கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை. வானத்திலிருந்து நீர் வராத போதும் தன் வறட்சிக்கைகளுடன் அடிவயிற்றைத் தாகமுடம் தடவிப்பார்க்கும் பொட்டல்காட்டுப்பூமிபோல் இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லமுடியாத பிரச்சனைகள் எழுந்துவரத்தான் செய்கின்றன. நாம் அமைதியாகிவிட்டால் அதன்கொட்டம் அடங்கிவிடுமா என்ன?

காலாவதியான மாத்திரையும் கூட பிரச்சனை பண்ணும்போது, நாம் உயிருடன் உள்ள போது நம்மைச் சுற்றிலுமுள்ளவைகள் நம்மைத்தேடி வந்து பிரச்சனை செய்யவில்ல என்றால் நாம் உயிர் வாழ்வது பூமிக்குச் சுமையல்லவா??

தற்கொலை ஒன்றுதான் தீர்வு என்று உள்மனம் சொன்னால் அதைக் கேட்காதீர்கள் அதோரு போரிடுவதுபோல் வாதிட்டு வாழும் வாழ்க்கைக்கு புதிய மகிழ்ச்சியுடன் எதிர்ப்பாற்றல் எனும் ஓட்டுப்போடுங்கள்.

நான்கு நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக ஒரு ஆய்வு தகவல் வெளியாகிறது.

நண்பர்களே உங்களின் மனத்தைத் தைப்பதுபோன்றோ இதயத்தை இறுக்கமாக்குவதுபோன்றோ எதாவது மன அழுத்தம் இருந்தால் நீங்கள் கூச்சம் பார்க்காமல் மனம்விட்டுப் பேசுங்கள்….

எதாவது இருந்தால் சொல்லிவிடுங்கள்…எதையும் மனதில் போட்டுப் பூட்டிவைப்பதால்தான் இந்த எழிலான வாழ்க்கையை அதன் தன்மையை உணராமல் எளிதிலேயே விட்டுவிட்டுச் செல்கிறோம்.

எல்லாம் இங்கு நிலைபெறுவதில்லை என்றாலும் இருக்கின்ற வாழ்க்கையை நாம் பரிமாறிக்கொண்டு எதிர்ப்புகளைச் சமாளித்துக் கொள்ளும் துணிவும், போராடும் தைரியமும் இருந்தாலே போதும்! நாம் எப்பேர்பட்ட இன்னல்களையும் தாண்டி இந்த உலகத்தில் நாம் வாழ்வின் பக்குவகரையை அடைந்திடுவோம்.

இறைவனின் செயலாக நாம் பிறந்தாலும், பெற்றோருக்குப் பிள்ளைகள் என்பதால் இவ்வுலகில் நாம் தற்கொலை செய்வது என்பது நாம் அவர்களுக்குக் கொடுக்கு அவப்பெயர் என்பது என் கருத்து.

எத்தனையோ போர்களில் விழுப்புண் ஏற்று, தோல்வியுற்று ஆகப்பெரும் பேரரசுகளை ஆண்டவர்களைவிடவா நாம் தோல்வியும், துரோகமும், ஏமாற்றங்கலும் வலிகளும் சந்திருக்கப்போகிறோம்..?

அதனால் எதையும் சமாளித்துப் பிரச்சனைக்குத் தீர்வு காண விளையுங்கள்,. இருப்பது ஒரே உயிர் என்பது முக்கியமிங்கு. அது நாம் இவ்வுலகில் பிறந்து சாதித்து மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பதற்கான வித்து அதுதான்.

சினோஜ்