திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (21:44 IST)

’’மனுஷன் இப்டி பண்ணிட்டாரே…’’.ஆட்டோ ஓட்டுநரை நெகிழ வைத்த முன்னணி நடிகர்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் ஆட்டோ ஓட்டுநருக்கு உதவி செய்துள்ள சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர் தற்போது எனிமி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்குநம் இப்படத்தில் விஷால் மற்றும் ஆர்ய இருவரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் புதுச்சேரி சென்ற நடிகர் விஷால், அங்குள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவில் ஏறி னார். பின் அவருடன் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையில் பேசிக் கொண்டே சென்றுள்ளார்.

இதையடுத்து, விஷால் தன் கையில் இருந்த பணத்தை அப்படியே அவரிடம் கொடுத்துள்ளார். அதில் ரூ.370 இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் அவர்.
இந்தப் பதிவை புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநரான முத்து சரவணன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.