வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (20:03 IST)

என் வாழ்வில் சிறந்த நாள் இது ! ஆர்யாவை பாராட்டிய கமல்ஹாசன்....வைரல் புகைப்படம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இப்படத்தை இன்று பார்த்த நடிகர் கமல்ஹாசன் ஆர்யாவைப்பாராட்டியுள்ளார். 

சமீபத்தில் நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் சார்பட்டா போஸ்டரைப் பகிர்ந்து உங்கள் கடின உழைப்பு  பலருக்கு இன்ஸ்பிரேசனாக உள்ளது எனத் தெரிவித்து ஆர்யாவைப் பாராட்டினார்.

இந்நிலையில், இன்று பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் ஆர்யா மற்றும் படக்குழுவை மனதாரப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ள ஆர்யா, எனது பிறந்தநாளுக்கு இதைவிட சிறந்த பரிசை என்னால் கேட்க முடியாது.