நடுரோட்டில் குடிபோதையில் நின்ற பெண் – கிட்ட வந்தால் துணிகளை அவிழ்பேன் என மிரட்டல்!

Last Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:24 IST)

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் இரவில் குடிபோதையில் சாலையில் நின்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே மத்திம வயது பெண் ஒருவர் சாலையில் நின்றுகொண்டு அங்கு வரும் வாகனங்களை போக்குவரத்தை சீர் செய்வது போல நடந்துகொண்டார். இதனால் அவர் குடிபோதையில் இருக்கிறார் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர் என மக்கள் நினைத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் யாராவது கிட்டே வந்தால் மொத்த துணிகளையும் அவிழ்த்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

கிட்டதட்ட 3 மணிநேரம் இதுபோல அவர் நடந்துகொண்ட நிலையில் அதன் பிறகு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். கடைசி வரை அந்த பெண் யார் என்ற விவரம் தெரியவில்லை.இதில் மேலும் படிக்கவும் :