பெண் குழந்தைக்கு தந்தையான டிவில்லியர்ஸ் – வெளியிட்ட புகைப்படம்!

Last Updated: வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:12 IST)

கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மிஸ்டர் 360 என்ற பெயரோடு உலக பவுலர்களை எல்லாம் கிடுகிடுக்க வைத்த டிவில்லியர்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அந்நாட்டு வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் விலகினார் என சொல்லப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட அவர் முயற்சி செய்தார். ஆனால் அதற்கு வாரியம் சம்மதிக்கவில்லை. உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா மிக மோசமாக தோற்றது. அதன் பின் ஆம்லா போன்ற வீரர்களின் ஓய்வு அந்த அணியை மேலும் தொய்வடய வைத்தது. இந்நிலையில் டிவில்லியர்ஸ் இப்போது ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரை முடித்துள்ள அவருக்கு இப்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவரே தன் சமுகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்த குழந்தைக்கு யாண்ட்டே என்று பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :