திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:10 IST)

10க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குள்ள பெண்ணுக்கு பாஜகவில் பதவி!

10க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குள்ள பெண்ணுக்கு பாஜகவில் பதவி!
பாஜக தமிழகத் தலைவராக எல் முருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து பாஜகவில் இணையும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒருசில ரவுடிகளும் பாஜகவில் இணைந்து இருப்பதாகவும் அவர்களுக்கு பாஜகவில் பதவிகள் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே பிரபல ரவுடி கல்வெட்டு ரவி மற்றும் டோக்கன் ராஜா என 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்றும் அவர்களுக்கு பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது பெண் தாதா என்று கூறப்படும் ஒருவருக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல பெண் தாதா அஞ்சலை என்பவர் வட சென்னை மேற்கு மகளிர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது கொள்ளை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது