திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 21 நவம்பர் 2020 (10:59 IST)

தலித் பெண்கள் காலில் விழுந்த வானதி சீனிவாசன்!

பாஜக மகளிர் அணி தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள வானதி சீனிவாசன் தலித் பெண்கள் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார்.

பா.ஜ.க மகளிரணி தலைவர் பொறுப்பு தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தலைவரான பின் டெல்லியில் இருந்து கோவைக்கு திரும்பிய அவருக்கு சிறப்பான வரவேற்பை அவரது கட்சியினர் அளித்தனர்.  இதையடுத்து தொண்டாமுத்தூர் அருகே உள்ள தனது சொந்த ஊரான உலியம்பாளையத்திற்கு சென்ற வானதி சீனிவாசன் தலித் மக்கள் வழிபடும் கோயிலில் வழிபட்டார். பின்னர் அங்கு தலித் பெண்களின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். அதன் பின்னர் அந்த  பெண்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.