ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்- வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தம் நிலவுவதால் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழு மண்டலமாக வலுப்பெற்று இது தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.