1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances for 4 days

அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை சீசன் முடிந்துவிட்ட போதும் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வபோது மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. சமீபத்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சென்னை, கோவையில் திமுகவினர் வன்முறை! – வீடியோவோடு வந்த எடப்பாடியார்!